Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 8 June 2014

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வருக்கு, வரும், 12ம் தேதி மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்று

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வருக்கு, வரும், 12ம் தேதி மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்று வழங்க உள்ள நிலையில், பிழையான மதிப்பெண் சான்று திருத்தும் பணி, வரும், 9ம் தேதியுடன் முடிவடைந்து, வினியோகிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த, கல்வி ஆண்டில், ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வுக்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட தேர்வரிடம், அவரது பெயர், பிறந்த தேதி, பாலினம், ஜாதி, முகவரி, மதம், மாற்றுத்திறனாளியா, பெற்றோர் பெயர், மொபைல் எண், படிப்பு குரூப், பாடங்கள் ஆகியவை உறுதிமொழி சான்றிதழில் பெறப்பட்டது.
தேர்வு முடிவு வெளியான பின், ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றவருக்கு, ஃபோட்டோவுடன் மதிப்பெண் சான்று, இருப்பரிமாண பட்டக் குறியீடு, கூடுதல் ரகசிய குறியீடுடன் சான்று வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த, மே, 23ம் தேதி, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிவு வெளியாகி, வரும், 12ம் தேதி மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்று (டி.சி.,) வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த, 5ம் தேதி, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் சான்றை, கல்வித்துறை அதிகாரிகள் வழங்கினர். அவர்கள், 5 மற்றும், 6ம் தேதியில், ஏற்கனவே மாணவரிடம் பெற்ற உறுதிமொழி சான்றின் அடிப்படையில், மதிப்பெண் சான்றை சரிபார்த்து, பிழையுள்ள மதிப்பெண் சான்றை, நேற்று, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பிழையான மதிப்பெண் சான்று, நேற்றிரவு, சென்னை தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் பரிசீலனையின் பேரில், வரும், 9ம் தேதி திருத்தப்பட்டு, புதியதாக மதிப்பெண் சான்று, மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பர். அவர்கள், மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்து, மறு தணிக்கை செய்வர்.

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், ஒரு தனியார் பள்ளியின் பெயரில், எட்டு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மற்றும் மற்றொரு தனியார் பள்ளி மாணவரின் பிறந்த தேதியில் திருத்தம் இருந்தது. மற்ற சான்றுகளில், எவ்வித பிழைகளும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

"வரும், 12ம் தேதி, மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்று வழங்க உள்ளதால், அதற்கு முன்னதாக, எவ்வித குளறுபடியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, மதிப்பெண் சான்று பிழை திருத்தும் மற்றும் தணிக்கை பணி, ஒரு வாரமாக நடந்தது' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment